Loading...
பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து மூடப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியா, நெடுஞ்சலை 1 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து 99 தெற்கு இணை வீதி மற்றும் வெளியேறும் 95 வாட்மாக் வீதி இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
குறித்த விபத்தில் சுமார் 15 ற்கு மேற்பட்ட கார்கள் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதன் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன், வேறு வீதிகளை பயன்படுத்துமாறும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் அவசரக் குழுக்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
Loading...