வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான யூடோவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தையும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றன.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இத்தொடர் நடைபெற்றது.இதில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 4 தங்கப் பதக்கத்தையும், 4 வெள்ளி பதக்கத்தையும், 5 வெண்கலப்பதங்களை பெற்று முதலாமிடத்தைப் பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக அணி 3 தங்கப் பதக்கத்தையும், 2 வெள்ளி பதக்கத்தையும் 3 வெண்கல பதக்கத்தையும் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.
வவுனியா மாவட்ட செயலக அணி 2 தங்கப் பதக்கத்தையும், 2 வெள்ளி பதக்கத்தையும் 4 வெண்கலப் பதக்கத்தையும் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
பெண்களுக்கான போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி 5 தங்கம், 2 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி 3 தங்கம் , 3 வெள்ளி, 8 வெணகல பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், வவுனியா மாவட்டச் செயலக அணி 1 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.