இலங்கையின், 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் இடம்பெற்ற ஒரு சில நிகழ்வுகள் பலரை கேள்விக்குட்படுத்தியுள்ளன.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்களின் விசேட அணிவகுப்புக்கள் மற்றும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றபோது அப்பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.
கொட்டும் மழையில் பெருமளவான பாடசாலை மாணவர்கள் நனைந்த வண்ணம் இவ்வாறு சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளமை பலரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் காத்திருக்க மாணவர்கள் மழையில் நனைந்த வண்ணம் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு பாடசாலை மாணவர்கள் நடத்தப்பட்டமை சரியா என்ற கேள்வி பலரிடத்திலும் எழுந்துள்ளது.