அல்பேர்ட்டாவுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கையை கனடா சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ளது.
தென் பகுதியை நோக்கி தற்போது குளிர் காலநிலை கடந்து செல்லும் நிலையில், இன்று காலை அல்பேர்ட்டாவில் -40C இல் குளிர்காற்று வீசும் என கனடா சுற்றுசூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு கல்கரியில் இன்று -29 C, செவ்வாய்க்கிழமை -20 C ஆகவும், புதன்கிழமை -15 ஆகவும் காலநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எட்மன்டனில் காலநிலை திங்கட்கிழமை -29 C, செவ்வாய்க்கிழமை, -23 C புதன்கிழமை -24 C, வியாழக்கிழமை -21 C ஆகவும் வெள்ளிக்கிழமை 20 C ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச்செய்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.