ஸ்கார்பரோவில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டன் வீதி மற்றும் ஹன்ட் கிளப் டிரைவ் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மீட்பு குழுவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த பகுதிக்கு அந்த குழு சென்றது. அங்கு சென்றபோது 3 பேர் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரொறன்றோ அவசர மருத்துவ சேவையின் துணை தளபதி, “குறித்த மூவரில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது.
மேலும் அவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றுமொருவர் அருகில் உள்ள முதலுதவி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.” என கூறினார்.
அத்தோடு சமபவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்