முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தின் தானியங்கி கமெரா சுழன்று சுழன்று படமெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு படைமுகாம் வாயிலுக்கு முன்னால் அணிதிரண்ட மக்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு பட்டி நாளாக அறிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்கலை மாணவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்த இந்த போராட்டத்தின்போது வீதியில் போராட்டத்திற்கு வருபவர்களையும் படைமுகாம் வாயிலுக்கு முன்னால் நின்று படம் எடுக்கும் ஊடகவியலாளர்களையும் படையிரின் தானியங்கி கண்காணிப்புக் கமரா சுழன்று சுழன்று படமெடுத்துள்ளது.
படையினரின் படைமுகாம் வாயிலின் முன்பக்கம் 360 பாகையும் சுழலக்கூடியவகையில் அதிநவீன கண்காணிப்புக் கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தினையும் ஒளிப்பதிவு செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.