மகளின் காதல் விவகாரம் வெளியே கசிந்து விடுமோ என பயந்து தந்தை மகளை துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி.இவரது மகள் வைஷ்ணவி. வைஷ்ணவி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
இந்நிலையில் வைஷ்ணவி தன்னுடன் படிக்கும் மாணவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த தொடர்பில் வெங்கட் ரெட்டிக்கு தெரிய வரவே அவர் வைஷ்ணவியை கடுமையாக கண்டித்துள்ளார்.ஆனால் வைஷ்ணவி தந்தையின் பேச்சை கேட்காமல் அந்த வாலிபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.மகளின் காதல் விஷயம் எங்கே வெளியே தெரிந்து தமக்கு அவமானமாகிவிடுமோ என அஞ்சிய வெங்கட், வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெங்கட்டை கைது செய்த காவற்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.