Loading...
வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவரை ஆதரிக்கும் கனேடிய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு, கனடாவின் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இது தேர்தலில் வாக்கெடுப்பின் மூலம் வெற்றிபெற்ற ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Loading...
வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியான ஜுவான் கெய்டோவை கனடாவும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், இதற்கு பொது ஊழியர்களுக்கான கனேடிய தொழிற்சங்கம், கனடாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான கனேடிய தொழிலாளர் சங்கம் மற்றும் கனேடிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவு கொள்கையை கனடா பின்பற்றக் கூடாது என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Loading...