இயற்கையின் உன்னதமான படைப்புகளில் முக்கியமானவர்கள் என்றால் அது பெண்கள்தான். ஏனெனில் இவ்வுலகை வழிநடத்தவும், சமநிலையில் வைத்திருக்கவும் பெண்களின் பங்கு என்பது மிகவும் அவசியமானது. இவ்வுலகத்தில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பெண்களுடன் தொடர்புபடுத்தியே நடக்கிறது. நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது இவ்வுலகு.
நம் வாழ்க்கையை அழகாக்குவதும் பெண்தான், அதனை நரகமாக்குவதும் பெண்தான். இது இரண்டுமே அவர்களின் இயற்கை குணம், மற்றும் நீங்கள் அவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் இவற்றை பொறுத்தே அமைகிறது. என்னதான் பெண்களை பூக்களுடன் ஒப்பிட்டாலும் அவர்களுக்குள்ளும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். அழகான மலர்கள் கூட சிலசமயம் உயிரை பறிக்கிறது இல்லையா? அது போலத்தான். இந்த பதிவில் மிகவும் கொடூர மனம் படைத்த பெண்கள் எந்தெந்த ராசிகளில் பிறப்பார்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஏனெனில் பழிவாங்குவதில் இவர்க்ளுக்கு எந்தவித வரைமுறையும் கிடையாது. கொடூரமான மற்றும் இரக்கமற்ற முறையில் தங்கள் எதிரிகளை அவர்கள் அழிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.
கடகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் நடமாடும் வெடிகுண்டு போன்றவர்கள். தங்களுக்கு பிடிக்கத்தவர்களை சாய்க்க தாக்க தருணம் அமையும்போது எந்தவித தயக்கமும், இரக்கமும் இன்றி எதிரிகளை சாய்த்துவிடுவார்கள். அதனால்தான் இவர்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.
சிம்மம்
இவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான். சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள், பின்னர் அதற்கான மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
கன்னி
மிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள். அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை. இதையும் மறந்து விடாதீர்கள் இவர்கள் அதீத பொறாமை குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
மீனம்
இந்த ராசி பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் இவர்கள் போல உங்கள் தோல்வியில் பங்கெடுத்து கொள்ளும், எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கும் தோழியும் இல்லை, அதேசமயம் உங்களை அவமானப்படுத்தி, வாழ்வதே வீண் என்று நினைக்கவைக்கும் மோசமான எதிரியும் இல்லை. இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது, மற்றவர்களாலும் அவர்களை சரியான வழியில் வழிநடத்த இயலாது. இறுதியில் நண்பர்கள் அனைவரும் எதிரியாகத்தான் மாறுவார்கள்.