காலங்களின் வளர்ச்சியால் எந்த விதமான வளர்ச்சியை தொடர்ந்து கண்டு கொண்டு வந்தாலும், சிலர் அலைபேசியில் பேசும் நேரங்களில் சார்ஜ் போட்டு கொண்டு பேசும் பழக்கத்தை மாற்றால் வைத்துள்ளனர். இது குறித்து பல விதமான எச்சரிக்கை காணொளிகள் வந்தாலும், சில நேரங்களில் துர்சம்பவங்கள் நடைபெற்றாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
சிலர் விடிய விடிய அலைபேசியை உபயோகம் செய்து கொண்டு, தூங்கும் நேரத்தில் பாட்டுக்களை இசைத்து கொண்டு ஜார்சில் போட்ட வண்ணம் உறங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்தும்., பெண் ஒருவர் செய்த காரணத்தால் அவருக்கு இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை கானாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பாத்திமா (வயது 45). இவர் கடந்த சனிக்கிழமையன்று உறங்கும் போது காதில் ஹெட்போன் உபயோகம் செய்தவரே, பாட்டுக்களை கேட்டு கொண்டு அலைபேசியை சார்ஜில் போட்டுவிட்டு உறங்கியுள்ளார்.
காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காததால் அவரது கணவர் அவரை எழுப்பியுள்ளார். பாத்திமா அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பாத்திமாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும்., மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறியழுத சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.