அவுஸ்திரேலியா, சிட்னி விமான நிலையத்தில் பயணியின் கைப்பெட்டியிலிருந்து 10 அரிய இனப் பல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Shingleback lizards எனும் அந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய விலங்குகள் பிரிவைச் சேறும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றை இரு தட்டுகளுக்கு இடையில் மறைத்து ஜப்பானுக்குக் நபர் ஒருவர் ஜப்பானுக்கு கடத்த முயற்சித்துள்ளார்.
கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள விலங்கினத்தை ஏற்றுமதி செய்ய முயன்றதாக ஜப்பானைச் சேர்ந்த 46 வயதாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அக்குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 150,000 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம் என எண்ணப்படுகின்றது.
அவுஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பல்லிகளை வனவிலங்கு மருத்துவமனையிடம் ஒப்படைத்துள்ளனர்.