சத்திர சிகிச்சையின் போது அணியும் உடையை உடுத்துக் கொண்டு பிரபல மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிஸ் நகரில் பொபினி (Bobigny) பகுதியில் குறித்த சம்பவம் பொபினியில் உள்ள Avicenne மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருத்துவர் (57 வயது) உடல் பருமன் சிகிச்சை, உடல் வளர்ச் சிதை ஆகிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் கடந்த சில மாதங்களாக தீவிர நோயுக்குள் சிக்கியிருந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனையின் அவசரசிகிச்சை மருத்துவரான Christophe Prudhomme கூறுகையில்;
“சத்திரசிகிச்சையின் போது அணியும் உடையினை மருத்துவர் அணிந்திருந்ததாகவும், பின்பு அவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.