அமெரிக்காவில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி தாயை 4 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சியாட்ல் புறநகரான ஸ்கைவே பகுதியில் உள்ள வீட்டில் 8 மாத கர்ப்பிணி பெண் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது மகன் படுக்கையில் தலையணை அருகே இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டான். அதில் கர்ப்பிணி பெண்ணின் முகத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
அதனால் அவர் படுகாயம் அடைந்தார். அதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடக்கின்றன. எனவே துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்ற கருத்து அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அதற்கான சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியை அஜாக்கிரதையாக வைத்திருந்ததாக சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.