இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச கூறியதாக கூறப்படுகிறது.
அண்மையில் ஊடகவியலாளர்கள் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது மகிந்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழின அழிப்புப் போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடக்கும் நிலையில், இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மகிந்த முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இராணுவத்தினரால் போர்குற்றம் நடந்தது என்பது உண்மை தான். அதேபோன்று விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவத்தினருக்கு மாத்திரம் தண்டனை வழங்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் அவ்வாறான தண்டனை வழங்க வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.