திருகோணமலை முஸ்லிம்கள் வாழும் எரக்கண்டி பிரதேசத்திலிருந்து கடற்படையினரால் வெடி பொருட்கள் சிலவும் தூரத்திலிருந்து அவற்றை இயக்கக் கூடிய சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன. கிழக்கு கடற்படையினர் மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது நேற்று புதன் கிழமை இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை புல்மோட்டை பகுதிகளிலும் நேற்று ஆயுதம் மீட்பு இரு இடத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் ,சிங்களவரிடையே ஏற்பட்ட அரச காணி ஆக்கிரமித்தல் போட்டியில் அரிசிமலை ,குச்சவெளி பகுதியில் புத்த பிக்குகளால் அரச காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த பிரிவேனா பாடசாலை,விகாரைகள் அமைக்கும் பணியில் இராவண பலய எனும் பௌத்த பிக்கு அமைப்பு ஈடுபட்டுவருகின்றது.
இவர்கள் மீது தாக்குதல் ஈடுபடுத்தும் நோக்கில் முஸ்லிம் தரப்பால் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பல கோணத்தில் போலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.புத்தளத்தில் கைப்பற்ற ஆயுதங்களை தொடர்ந்து பல இடத்தில் முஸ்லிம் ஆயுத குழு உருவாக்கவும் புத்த சிலைகள் அழிக்கவும் ஆங்காங்கே வெடிபொருட்கள் தொடர்ந்து மீட்கப்பட்ட வருகின்றது.