Loading...
வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக 250க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் முற்றிலும் வசிக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக பேரழிவுமிக்க வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்ஸூக் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டவுன்ஸ்வில்லே பகுதியில் சுமார் 750 வீடுகள் வௌ்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் குறித்த பகுதியில் வாழும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இருப்பினும் தமக்கான இருப்பிடங்களை தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சுமார் 1,100 பேர் இடம்பெயர்ந்துள்ளமை துன்பியலே.
Loading...