பிரான்சில் பிரிட்டனி மாகாணத்தில் வன்னெஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலியன். 27 வயது நிறைந்த இவர் தனது மனைவிக்கு நீச்சல் உடை ஒன்றை இணையதளத்தில் ஆர்டர் செய்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருடைய வீட்டிற்கு இணையத்தில் ஆர்டர் செய்த பொருள் ஒன்று வந்துள்ளது. உடனே அவர் தன் மனைவிக்கு ஆர்டர் செய்த நீச்சல் உடை என அந்த பார்சலை வாங்கியுள்ளார். பின்னர் அதனை அதை திறந்து பார்த்த ஜூலியன்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அண்ட் பார்சலில் சுமார் 18,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்தது. மேலும் தங்கக்கட்டிகள் ஒவ்வொன்றும் 20 கிராம் முதல் 50 கிராம் வரை இருந்துள்ளது.
உடனே பதறிப்போன அவர், இதுகுறித்து தன் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கும் எதுவும் தெரியாதநிலையில், Julien உடனடியாக டெலிவரி வந்த முகவரியை பார்த்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டிற்கு அருகில் இருப்பவருக்கு வந்த பார்சல் என்பதை அறிந்த அவர், ஏதேனும் பிரச்சினை வரலாம் என பயந்து உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் அதனை பெற்றுக்கொண்ட போலீசார் ஜூலியன் செயலைக் கண்டு அவரை பாராட்டியுள்ளனர்.மேலும் அவரை பாராட்டும்விதமாக France’s National Gold Association அவருக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தங்ககட்டியை பரிசாக அளித்துள்ளது.