கனகராயன்குளம் A9 வீதியில் கனகர வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அருகில் விபத்து பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது இன்று காலை யாழ் நோக்கி A9 வீதியுடாக தேங்காய்கள் ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முன்னால் பயணித்து கொண்டிருந்த அறுவடை இயந்திரம்(சுனாமி மெசின்) ஒன்றினை திடீரென அவதானித்துள்ளார்.
இந்நிலையில், கனரக வாகன சாரதி பதற்றத்தில் நிறுத்து ஆழியை (பிரேக்) அழுத்தியதினால் வேக கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திர்த்துடன் மோதி விபத்துக்குள்ளாகி குடை சாய்ந்துள்ளது.
குறித்த விபத்தில் அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.