கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த நபர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தையை கொலை செய்துள்ளார்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கர்ணன் என்பவர் நடிகர் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகர். இவர் லட்சிய திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தார்.
கர்ணன் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கடையின் கீழ் பெரிய கருப்பன் என்ற முதியவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். பெரியகருப்பணின் திருமணமான மகள் சந்தியா அண்மையில் கணவரை பிரிந்து வீட்டிற்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று மதியம் கர்ணன் டீக்கடையை அடைத்து விட்டு பெரியகருப்பனின் மகள் சந்தியாவுடன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றார்.
அப்போது கடையில் ரத்த வெள்ளத்தில் பெரிய கருப்பன் இறந்து கிடந்தார்.
பொலிசாரின் விசாரணையில் சம்பவத்தன்று காலையில் பெரியகருப்பனுக்கும் கர்ணனுக்கும் தகராறு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது.
பெரியகருப்பனை கொன்றதை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
கணவனை பிரிந்து வந்த பெரிய கருப்பனின் மகள் சந்தியாவுக்கு விவாகரத்து வழக்கில் உதவுவதாக கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கர்ணன் சந்தியாவை ஒரு தலையாக காதலித்தார்.
சந்தியாவிடம் தனது காதலை வெளிப்படுத்திய போது, அவர் காதலை ஏற்க மறுத்து தனது தந்தையிடமும் தெரிவித்துள்ளார்.
மகளின் வாழ்க்கையில் ஏற்கனவே பிரச்சனை இருப்பதால் மகளுடன் பேசக் கூடாது என கர்ணனை கண்டித்தமையைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து பெரியகருப்பனை தலையில் அடித்து கர்ணன் கொன்றுள்ளார்.
பெரிய கருப்பன் இறந்து விட்டால் சந்தியாவுக்கு ஆதரவு யாரும் கிடையாது.
ஆகவே சந்தியாவை அடைவதற்கு இதுவே எளிய வழி என நினைத்து தன் திட்டத்தை கர்ணன் போட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.