அக்காவின் திருமணத்திற்காக தங்கை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பூனம் சோனூன் மாரத்தான் ஓடியதன் மூலம் கிடைத்த பணத்தில் அக்காவின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தைச் சேர்ந்த பூனமின் தந்தை கூலித்தொழிலாளி.
சிறிதளவு கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்தாலும் வறுமையிலும் தனது கனவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் பூனம்.
இவரது மூத்த சகோதரிக்கு சமீபத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடந்துள்ளன.
ஏழ்மையான குடும்பம் என்பதால் திருமணத்திற்கு போதுமான நிதி வசதி இல்லாமல் தவித்துள்ளனர்.
இந்நிலையில் தன் சகோதரி திருமணத்துக்குத் தேவையான பணம் திரட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட புனே மாரத்தான் போட்டியில் பங்கேற்கேற்றார்.
இந்தப் போட்டியில் வெற்றிக் கனியைச் சுவைத்த பூனம் முதலிடம் பிடித்து 1.25 லட்சம் பரிசாக பெற்றார். அந்தத் தொகையை சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்துள்ளார்.
இந்த விடயம் உண்மையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.