Loading...
தாய்வானைத் தலைமையகமாக கொண்ட சீன விமான சேவை தனது 26 சேவைகளை ரத்து செய்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்ட விமானிகளின் பணிநிறுத்தம் காரணமாக ககுறித்த சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்பணி நிறுத்தம் நாளை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஷாங்காய், பீஜிங், ஹொங்கொங், டோக்யோ, பெங்கொக் உள்ளிட்ட பல நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading...
விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்தவும், விமானிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோரி இப்பணிநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
விமானிகளின் தொழிற்சங்கங்ளைச் சேர்ந்த சுமார் 700 தொடக்கம் 900 வரையான உறுப்பினர்கள் இப்பணி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Loading...