பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்த மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டித் தொடரில் முதலில் நடைபெறும், ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இருந்து அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ விலகியுள்ளார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டொம் லதம் அணியின் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி தற்போது நியூசிலாந்து அணியின் விபரத்தை பார்க்கலாம்,
கேன் வில்லியம்சன், டொட் ஆஸ்ட்ஸ், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லாதம், கொலின் முன்ரோ, ஜம்மி நீஸம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ரோஸ் டெய்லர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி நேப்பியர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.