Loading...
முட்டாள் என்று சொன்னதால் திருமணமான மூன்றே நிமிடத்தில் கணவரை மணப்பெண் விவாகரத்து செய்துள்ளார்.
குவைத்தை சேர்ந்த ஒரு ஜோடி தங்களின் திருமணத்தைப் பதிவாளர் முன்னிலையில் நடத்தினர்.
திருமணத்தை அங்கீகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் போது மணமகன் பெண்ணை முட்டாள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த பெண் கணவரை அதே இடத்தில பரஸ்பர விவாகரத்து செய்யும் படி கேட்டுக்கொண்டார்.
Loading...
மணப்பெண்ணின் முடிவிற்குப் பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
திருமணமான புதிதிலேயே மரியாதை கொடுக்காவிட்டால் கடைசி வரை இருக்காது என்று கூறி விவாகரத்து பெற உதவினார்கள்.
இது போன்ற சம்பவம் கடந்த ஆண்டு அகமதாபாத்திலும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...