சகல மீனவ படகுகளுக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மீன்பிடித் திணைக்களத்தின் பணிகப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் என்ற போர்வையில் போதைப் பொருள், சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்குமுகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான கொடுக்கள் வாங்கல்கள் மற்றும் சட்டவிரோத மனித கடத்தல் விடயங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மீன்பிடித் திணைக்களத்தில் அமைச்சர் பீ.ஹெரிசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக திரு. பிரசன்ன கினிகே குறிப்பிட்டார்.
இந்த தொழிநுட்பத்தின் மூலம் நடுக்கடலில் மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கரைக்கு விரைவாக அறிவிப்பதற்கும் இயலுமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கு குறுச் செய்திகள் மூலம் அறிவிப்பதற்கும் இந்த தொழிநுட்பம் உதவியாக அமையும்.