ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்ப்பார்ப்பில் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்ப்பார்ப்பில் இருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “கோத்தாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இன்னமும் முன்னணியில் இருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதை கோத்தபாய விரும்புவதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.