மட்டக்களப்பு மக்கள் கல்வி நிலையில் முன்நிலைக்கு வரவேண்டும் என சமூகநோக்காக நினைக்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் 10 ரூபாவுக்கு மணித்தியாலயத்திற்கு கவ்வி கற்பிக்க தயார் என்றால் மாநகரசபை கட்டிடம் கட்டித்தர தயார் என மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்
ஊடகவியலாளர்களுக்கும் மட்டு மாநகரசபை முதல்வருக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகரசபை கட்டிட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்
உள்ளுராட்சி சபை தேர்தல் நடந்து இன்று ஒருவருடம் இந்த நிலையில் நாங்கள் ஏப்ரல் மாதம் மாநகரசபையை பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் மாநகரசபை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன் இதில் பல விடயங்களில் வெற்றியடைந்துள்ளோம்.
முதலாவது தனியார் கல்வி நிலையங்களை கடந்த வருடம் டிசம்பர் மாத விடுமுறைகாலங்களில் மாணவர்களுக்கு ஒரு இடைவெளி வேண்டும் என்ற கோரிக்கைக்கமைய தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது ஆனால் அதற்கு பின்னர் மாணவர்கள் பெற்றோர்கள் ;அந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்குமாறு கோரினர்
அதற்கமைய மாநகரசபை நியதிச் சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்கள் நடாத்துவதற்கு விதிமுறைகள் இருக்கவேண்டும் அதனை நடைமுறைப்படுத்துமாறு அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்
ஆனால் அவர்கள் அதனை செயற்படுத்த வில்லை இது தொடர்பாக பல முறைப்பாடுகளையடுத்து நாங்கள் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டோம் அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆடு மாடுகளை அடைக்கின்ற கூடுகளிற்குள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.
ஒர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆயிரத்து 56 பிள்ளைகள் கல்வி கற்றுவருகின்றனர். ஆனால் ஒருவிதமான பாதுகாப்புமில்லை மின்சார ஒழுக்கு மழை தூவனம் அடிக்கின்றது பிள்ளைகளுக்கு 9 இஞ்சி அகலத்தில் வாங்கில்கள் பெண்பிள்ளைகள் போவதற்கு இடைவெளியில்லை மலசல கூடவசதியில்லை மிக கேவலமாக இருந்தது
இவ்வாறு சகல தனியார் கல்வி நிறுவனங்களிலும் பலமுறையான குறைபாடுகள் இருக்கின்றது இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. எனவே இந்த நிலையில் இப்படியான முழுகுறைபாட்டை சீர் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எங்கள் பிள்ளைகள் சுவாத்தியமான சுகாதாரமான சூழலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மக்கள் கல்வி நிலையில் முன்னிற்கு வரவேண்டும் என நினைக்கின்ற சமூகநோக்கான தனியார் கல்வி நிறுசனங்கள் ஆசிரியர்கள் 10 ரூபாவுக்கு மணித்தியாலயத்திற்கு கவ்வி கற்பிக்க தயார் என்றால்; மாநகரசபை கட்டிடம் கட்டித்தர தயார் . மாநகரசபை கட்டித்தரும் கல்வி நிலையங்களில் அவர்கள் கல்வி கற்பிக்கலாம்.
இங்கு கல்வி வியாபாரமாக போயுள்ளது மணித்தியாலயத்திற்கு 40 ரூபா தொடக்கம் 80 ரூபா அதேவேளை ஒரு கல்வி நிறுவனம் ஒரு பாடத்தை மாத்தில் 28 நாட்கள் என நேர அட்டவணை வழங்கியுள்ளது இதனால் அந்த பிள்ளை 28 நாட்கள் படிக்க செல்லவேண்டும் 28 நாட்டகள் பணம் கொடுக்கவேண்டும்
இந்த நிலையில் ஒரு பெற்றோர் வந்து ஒரு நாளைக்கு ஒரு பிள்ளைக்கு 250 ரூபா தேவை எனவும் 3 பிள்ளையுள்ள பெற்றோருக்கு ஒரு நாளைக்கு 750 ரூபா தேவை இது ஒரு வியாபாரம் இதனை அனுமதிக்க முடியாது
அதேவேளை கடைகளுக்கு முன்னால் வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் மக்கள் நடந்து செல்லமுடியாது போன்ற பிரச்சனைகளுக்கு இதற்கு இரு வாரங்கள் கடை உரிமையாளர்களுக்கு தீர்வு எட்டப்பட அவகாசம் வழங்கியுள்ளோம்
அவ்வாறே முச்சக்கரவண்டிகள் சேவை ஒரு ஓழுங்கான கட்டணங்கள் இல்லை ஒழுங்கான முறையில் வாடிக்கையாளர்களுடன் நடப்பதில்லை அதேவேளை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை 4 இலச்சம் ரூபாவரை விலைக்கு விற்கின்றனர். ஒரு இளைஞன்; தனது தொழிலை செய்வதற்கு முச்சக்கரவண்டி மட்டும் தான் முதலாக இருக்கவேண்டும் . ஆனால் அதைவிடுத்து அவருக்கு இன்னொரு முதல் தேவைப்படுகின்றது இந்த ஆட்டோ தரிப்பி இடத்தை வேண்டுவதற்கு
அரசகாணியில் முச்சக்கரவண்டி தரிப்பிடமாக இருக்கின்றது அதனை விலைக்கு விற்கின்றனர் இது ஒரு சட்டரீதியற்ற செயற்பாடு எனவே இந்த முச்சக்கரவண்டி தரிப்பிடங்களையும் அந்த தரிப்பிடத்தில் எத்தனை முச்சக்கரவண்டிகள் தரிப்பிடலாம் என தீர்மானிப்பது வீதி அதிகாரசபைக்கும் , மாநகரசபைக்கும் ஆகும்
எங்களுக்கு தேவை ஒழுங்காக நிர்வாகம் நடக்கவேண்டும். மக்கள் சுமுகமாக போய் வரவேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான சேவையை கொடுக்க வேண்டும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியது மாநகரசபையின் பெறுப்பு எனவே இதனடிப்படையில் முச்சக்கரவண்டி சேவையை ஒழுங்காக கொண்டுவர இருக்கின்றோம் என்றார்