Loading...
பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் சில பெற்றோல் நிரப்பு நிலையங்கள் இன்று மாலையில் இருந்தே அதிக விலையில் பெற்றோல் நிரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரான் குளத்தில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை தொடக்கம் ஒக்டைன் 92ரக பெற்றோல் 129 ரூபாவுக்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் 152 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Loading...
இதேவேளை, பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் இன்று மாலையில் இருந்தே அதிக விலையில் பெற்றோல் வழங்கியது தொடர்பில் பெற்றோலிய துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...