Loading...
அரச பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் வேதன முரண்பாட்டை உடனடியாக தீர்க்காவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசு நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் எஸ்.ஏ.உதயசிறி கொழும்பில் இன்று ஏற்பாட்டு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.
Loading...
இதேவேளை, தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்ட அதன் இணை ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானகே , தொடருந்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
Loading...