தனது குழந்தை கடத்தப்பட்டதாக பெண் ஒருவர் பொலிசில் முறைப்பாடு அளித்த நிலையில் தானே தன் குழந்தையை கொன்று விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த Nakira Griner (24), தன்னை ஒருவர் தாக்கி விட்டு தனது குழந்தையை கடத்திச் சென்று விட்டதாக பொலிசில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த நிலையில் மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்க, Nakira வின் வீட்டின் பின்பக்கத்திலேயே எரிந்த நிலையில் அந்த குழந்தையின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.
சந்தேகம் வலுக்க, பொலிசார் Nakiraவிடம் விசாரணை நடாத்தினர்.
விசாரணையில் Nakira முன்னுக்குப்பின் முரணாக பதிலைக் கூறியுள்ளார். அப்போது உண்மை அறியும் கருவியின் உதவியுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் பொய் கூறியது தெரியவந்தது.
பின்னர் பொலிசார் முறைப்படி விசாரிக்க, Nakira கூறிய விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தனது 23 மாதக் குழந்தை Daniel Griner, தான் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், சாப்பிட அடம்பிடிப்பதாகவும் கூறிய Nakira, அதனால் தான் குழந்தையை தாக்கியதாகவும், படிக்கட்டுகளில் உருண்ட குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி சில பாகங்களை இரக்கமின்றி எரித்துள்ளார்.
சிலவற்றை தோட்டத்தில் மறைத்து, சில துண்டுகளை தனது பர்ஸிலேயே மறைத்து வைத்தமையும் தெரியவந்துள்ளது.
Nakiraவைக் கைது செய்துள்ள பொலிசார், நாளை மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
https://cbsloc.al/2UPlf8y