மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவரை கஞ்சாவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் பாடசாலை ஒன்றின் முன்னாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிமிருந்து ஒரு மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து புலனாய்வு பிரிவு பொலிசார் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவனை பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்தனர்.
மாமாங்க பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இந்த வருடம் டிசம்பர் மாதம் கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவருடைய வீட்டிற்கு அருகில் கஞ்சா வியாபாரி ஒருவரிடம் இருந்து கஞ்சாவை பெற்று பாடசாலையில் கல்வி கற்றுவரும் தனது பாடசாலை நண்பர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுமார் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா பாவித்து வருவதாகவும், அவ்வாறே இன்றும் கஞ்காவை பாடசாலைக்கு எடுத்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.