Loading...
மலையாளம், தெலுங்கு, தமிழ் என முக்கிய மொழிகளில் நடித்தது மட்டுமில்லாமல் பாடல்களையும் பாடியவர் நடிகை மம்தா மோகன் தாஸ். தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடயற தாக்க படங்களில் நடித்துள்ள இவர் ஊமை விழிகள், உள்ளே வெளியே படங்களில் நடிக்கவுள்ளார்.
அண்மைகாலமாக 10 years challenge என பலரும் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தோம் என தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். இது வேடிக்கையாக தான் இருந்தது.
Loading...
ஆனால் மம்தா கடந்த 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு எதிர்கால கனவுகளை இழந்து, பின் நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார்.
தலைமுடி இல்லாத நிலையில் அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
Loading...