கனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் குளிர்காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கனேடிய காலநிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் எட்மன்டனில் -23.3 C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், அங்கு 9 km/h வேகத்தில் குளிர்காற்று தற்போது வீசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.