சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
குறித்த விஜயத்தின் போது மூன்று வருட நீட்டிக்கப்பட்ட 1.5 பில்லியன் யூரோ நிதி உதவியை ஐந்தாவது தடவையாக வழங்குவது தொடர்பான பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் அரசியல் நெருக்கடி காரணமாக அந்த நிதி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்தே ஐந்தாவது தவணைக் கடனை வழங்குவதற்கு முன்னதாக இப்பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்துக்குள் இலங்கைக்கு 1,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருந்தது.
சர்வதேச நாணய நிதியம் நான்கு கட்டங்களாக இதுவரை 759.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.