உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணங்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றொன்று அதிகமாய் சாப்பிடுவது. இதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிடும். ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டேயிருக்கத் தோன்றும்.
உண்பதற்கு அடிமையாகிவிடக் கூடும். விரைவில் உடல்பருமனாகிவிடுகிறது. உடல் பருமனாகிவிட்டால் குறைப்பது எளிதல்ல. ஆதலால் நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றம் கொண்டுவந்தாலே போதும். உடல் இடையை குறைத்து விடலாம்..
அவ்வாறு நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதோ அந்த மூலிகைப்பொருட்கள் உங்களுக்காக.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது..
இஞ்சி
இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது..
ஏலக்காய்
ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது..
மஞ்சள்
மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது..
வரமிளகாய் (Cayenne pepper)
இதில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது..
சீரகம்
ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது..
கருப்பு மிளகு
நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது..
ஆளி விதை (Flax seeds)
ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்..
கொத்தவரங்காய் (Guar gum)
கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது..
கடுகு
உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது..
தேங்காய் எண்ணெய்
உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு..
சோம்பு
உணவு செரிப்பதற்கு இது சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.
இதை தினமும் நாம் சமைக்கும் உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும் உடல் இடை அதிகரிக்க வாய்ப்பிருக்காது.