13-02-2019 புதன்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் முதலாம் நாள். வளர்பிறை அஷ்டமி திதி காலை 10.35 மணி வரை பிறகு நவமி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 5.38 மணி வரை பிறகு ரோகிணி. யோகம்: அமிர்தயோகம் மாலை 5.38 மணி வரை பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம் 6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.
குளிகை: 10:30 – 12:00.
சூலம்: வடக்கு.
பொது: மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம்.
பரிகாரம்: பால்.
மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
மிதுனம்
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
வியாபாரத்தில் வேலை யாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தை பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சிறப்பான நாள்.
சிம்மம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலை கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
துலாம்
சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள்.
சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டியநாள்.
விருச்சிகம்
மறைந்துக் கிடந்ததிறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
தனுசு
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிஉங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
நட்பு வட்டம் விரியும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.
மீனம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.
பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.