Loading...
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கன மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இரண்டு வாரம் தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.
பல இடங்களில் கால்நடைகள் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் அங்குள்ள கால்நடை பண்ணையாளர்கள் அரசிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து தற்போது கன மழையால் நல்ல நீர்வளத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் தொடர்மழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...