சீனாவின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் கலைகட்டியுள்ள நிலையில், கிழக்கு சீனாவின் ஷியாங்ஷி மாகாணத்தின் கான்ஷூ பிராந்தியத்தில் செர்ரி பூக்கள் மலர்ந்து இயற்கையை மேலும் மெருகூட்டியுள்ளன.
அந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் செர்ரி பூக்களால் சூழ்ந்துள்ளன. குறிப்பாக சுற்றுலா பூங்காக்களில் செந்நிற கடல் போன்ற தோற்றம் இயற்கையை மெருகூட்டியுள்ளன.
சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களை புத்துணர்வுடன் முன்னெடுத்துவரும் சீன மக்களை மகிழ்ச்சியான மனநிலையுடன் வைத்திருப்பதற்கு இவ்வாறான சூழல் அமைப்புகள் உதவுகின்றன.
சுமார் ஒரு லட்சம் செர்ரி ப்ளஸ்ஸம் மரங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை காட்சிகளை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
பெரும்பாலானவர்கள் தமது கைத்தொலைபேசிகளிலும், ஔிப்படக்கருவிகளிலும் இயற்கை காட்சிகளை பதிவு செய்து கொள்கின்றனர். இந்த மலர்கள் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனச் சோர்வை அகற்றுவதாகவும் சில சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மிகுந்த புத்துணர்வுடன் அந்த பூக்களைப் போலவே வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கின்றது என்று தனக்கு உணர்த்துவதாகவும் ஒரு சுற்றுலா பயணி தெரிவித்தார்.
அத்துடன், செர்ரி பூக்கள் மிக அழகாக வண்ணமயமாக இருப்பதுடன், ஔிப்படங்களை எடுப்பதற்கு சிறந்த இயற்கை வளமாக இருப்பதாகவும் இன்னுமொருவர் கூறுகிறார். இந்தநிலையில் குறித்த செர்ரி பூக்கள் பல வகைகளில், மாறுப்பட்ட அளவுகளில் இருப்பதாக பூங்காவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் கோவொபிங் நகரில் இயற்கை அழகுக்கு மேலதிகமாக பனிப் படர்ந்த மலைப்பகுதிகளும், மரங்களும் அழகு சேர்க்கின்றன.
பனிப் படலங்களால் சூழப்பட்ட தாவரங்கள் மேகம் போர்த்திய இயற்கை வளமாக காட்சியளிக்கின்றன. அத்துடன், நகரத்தின் மத்தியில் உள்ள சிற்றாறுகளும் பூங்காக்களும் அப்புதமான பனி உலகமாக மாறியுள்ளன.