வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
ஒழுக்கத்துடன் கல்வியைக்கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமூதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.