ல சிக்கல்கள் நிறைந்த இலங்கை அரசியல் தளத்தில் அடிக்கடி யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்டது.
தற்போது மைத்திரி – மகிந்த கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பான இழுபறிகள் குழப்பத்தின் பிரதான காரணம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இக் கூட்டணி மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூடி நடத்திய கலந்துரையாடலில் பல முடிவுகள் எடுக்கப்பட்டு;ளன. அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கியுள்ளது.
இவ்வாறு தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணையுமாயின் மிகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.