திருட்டுக்களில் ஈடுபட்ட வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அரச அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்து மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் இன்று உத்திரவிட்டார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்ததோடு திருட்டுப் போன பொருட்கள் சிலவற்றையும் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்தச் சிறுவனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம், அவரை ஒரு வருடத்துக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதித்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.