Loading...
மட்டக்களப்பு – கல்முனை பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கல்முனை – பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 61 வயதுடைய பொன்னையா வீதி, பெரியநீலாவனி பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
Loading...
குடும்பத்தினரிடையில் இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாகவே மேற்படி மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...