15-02-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 3ம் நாள். வளர்பிறை தசமி திதி காலை 8.10 மணி வரை பிறகு ஏகாதசி. மிருகசீரிஷ நட்சத்திரம் மாலை 4.16 மணி வரை பிறகு திருவாதிரை. யோகம்: சித்தயோகம்.
நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10.
எமகண்டம் மாலை மணி 3.00-4.30.
இராகு காலம் காலை மணி 10.30-12.00.
குளிகை: 7:30 – 9:00.
சூலம்: மேற்கு.
பொது: மதுரை இன்மையில் நன்மை தருவார். ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
பரிகாரம்: வெல்லம்.
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது ஏஜென்சிஎடுப்பீர்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப்புரிந்துக் கொள்வார்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கடகம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள்.
வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். போராடி வெல்லும் நாள்.
சிம்மம்
எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
கன்னி
சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதிக்கும் நாள்.
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள்.
நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல்திணறுவீர்கள். குடும்பத்தினர்சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள்.
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
தனுசு
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சிதங்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்
இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
மீனம்
எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன்அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும்.
வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.