பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து தரமான புதிய தூக்குக்கயிறைக் கொள்வனவு செய்வதற்கு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தூக்குமேடைக்குப் பயன்படுத்தப்படும் கயிற்றின் தரம் தொடர்பில் சிக்கல் காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிங்கப்பூர், மலேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதிய தூக்குக் கயிற்றை கொள்வனவு செய்வதற்குத் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வெளிவிவகார அமைச்சிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 25 பேர் பாரதூரமான விதத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனவும் அந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில், தூக்குமேடைக்குத் தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் 30 சிறைச்சாலைகள் காணப்படுகின்றபோதிலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.