போதைப்பொருள் கடத்தல் மற்றும் சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடைய பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்;
சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை ஒருபோதும் யாரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என்று கூறினார்.