இங்கிலாந்து கேப்டனை மோசமாக திட்டியதற்காக தடை விதிக்கப்பட்டுள்ள ஷனன் கேப்ரியல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
செயிண்ட் லூசியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷனன் கேப்ரியல், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து ஷனன் கேப்ரியல் கூறுகையில், அந்த நேரத்தில் அழுத்தம் அதிகமாக இருந்தது, ஜோ ரூட்டும் என்னை ஆழமாக பார்த்தார், இது அனைவரும் பயன்படுத்தும் உத்தி தான், அந்நேரத்திலேயே வார்த்தை பரிமாற்றம் நடந்தது.
நான் நீங்கள் ஆண்கள் பிரியரா? என கேட்டதும், தன்பாலின நாட்டமுடையவராக இருப்பதில் தவறில்லை என பதிலளித்தார்.
அதற்கு நான், அது பற்றி எனக்கு பிரச்சனையில்லை, ஆனால் புன்னகையிப்பதை நிறுத்த வேண்டும் என கூறினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக ஷனன் கேப்ரியல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.