தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அபார சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் நேற்று தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க அணி 235 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இன்றைய 2வது நாளில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இந்த இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 437 விக்கெட்டுகளை டெஸ்டில் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 125 போட்டிகளில் 436 விக்கெட்டுகளையும், இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் ஸ்டெய்ன் 92 டெஸ்ட் போட்டிகளில் தற்போது 437 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் அவர்களது சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களில் 4வது இடத்தையும், ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார்.