சண்டை, அடி, உதை என பல தினத்தை கொண்ட காதலர் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்படுகிறது
ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.
காதலர் தினம் துவங்கும் ஒரே வாரத்திற்கு முன்பே அனைவரும் காதலர் வாரம் என்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி, அந்த வாரத்தில் இனிப்பு நாள், சத்தியம் நாள், முத்த தினம் என்று பல்வேறு தினத்தை கொடடுவது வழக்கம். இந்த முறை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காதலர் வாரத்தின் கடைசி நாளை தான் நாம் காதலர் தினமாக கொண்டடி வருகின்றோம்.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த தினத்தை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டடி வருகிறது.
காதலர் தினம் முடிந்த அடுத்த நாளில் இருந்து காதலர் எதிர்ப்பு வாரம் என்று கொண்டாடப்படுவது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம், இந்த வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதியியில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை கொண்டடி வருகின்றனர்.
இன்று, பிப்ரவரி 15 அன்று முதல் கிக் டே, நறுமணத் தினம், காதலர் தினம், மற்றும் பல தினத்தை கொண்டடி வருகின்றனர்.