Loading...
அநுராதபுரம் மாநகர சபையில் இடம்பெற்ற 3 கோடியே 87 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த மாநகர சபையின் வருவாய் துறை பெண் அதிகாரி உள்ளிட்ட சிலரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அநுராதபுரம் மாவட்ட மேலதிக நீதவான் ஹேமந்த புஷ்ப்பகுமார முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Loading...
இதற்கமைய வருவாய் துறை பெண் அதிகாரி, அவரின் கணவர், மற்றும் அவரின் சகோதரர் உள்ளிட்ட அறுவரையே எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Loading...