யாழ்ப்பாணத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை மூன்று பேரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிஷ்ட இலாபச் சீட்டின் மூலம் சொகுசுக் கார் கிடைத்துள்ளதாக கூறி 12 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் நைஜீரியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போல் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணைகளை ஆராய்ந்த நீதிபதி கைது செய்யப்பட்டுள்ள மூவரில் ஒருவரிடம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாக்குமூலம் எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூன்று பேரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். அது தொடர்பான வழக்கு விசாரணைகளும் கல்கிஸ்ஸ நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.