Loading...
ஒன்ராறியோ மின் உற்பத்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் லயஷ், அப்பதிவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாகாணத்தில் அதிகளவான ஊதியம் பெற்ற அரசாங்க ஊழியர் இவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இவர் எதிர்வரும் மார்ச் மாத இறுதியுடன் அவர் அப்பதவியிலிருந்து விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
புதிய சேவை நிறுவனமொன்றில் இணையும் நோக்கிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால், அர்ப்பணிப்புமிக்க, திறமையான ஊழியர்களுடன் இவ்வளவு காலம் பணியாற்ற கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Loading...